ஆஸ்கர் ரேஸில் கோட்டை விட்ட ‘ஜல்லிக்கட்டு’!

ஆஸ்கர் ரேஸில் கோட்டை விட்ட ‘ஜல்லிக்கட்டு’!

இந்தாண்டு நடக்கவிருக்கும் ஆஸ்கர் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ஜல்லிக்கட்டு திரைப்படம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறியுள்ளது.

2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மலையாளத்தில் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ‘ஜல்லிக்கட்டு‘ திரைப்படம் வெளியானது. ஜல்லிக்கட்டு திரைப்படம் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இறைச்சிக்காக மனிதன் எந்தளவிற்குச் செல்கிறான் என்பதை டார்க் ஹியூமர் வகையில் நேர்த்தியாகக் கூறியிருந்தார்.

ஆஸ்கர் ரேஸில் கோட்டை விட்ட ‘ஜல்லிக்கட்டு’!

இந்தப் படத்திற்கு பல விருதுகளும் அங்கீகாரமும் கிடைத்தது. டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பெருமையை ஜல்லிக்கட்டு பெற்றது.

இந்தாண்டு நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பில் ஜல்லிக்கட்டு திரைப்படம் அனுப்பப்பட்டது. அதையடுத்து அந்தப் படக்குழுவை பலரும் பாராட்டினர். ஜல்லிக்கட்டு ஆஸ்கர் ரேஸில் விருது வெல்லும் என்று பலர் நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில் தற்போது ஆஸ்கர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறியுள்ளது.

ஆஸ்கர் ரேஸில் கோட்டை விட்ட ‘ஜல்லிக்கட்டு’!

இது இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம். இதுவரை இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ஒரு திரைப்படம் கூட ஆஸ்கர் விருது வெல்லவில்லை. இனி வரும் காலங்களிலாவது ஆஸ்கர் வெல்வோம் என்று நம்பிக்கை கொள்வோம்.

Share this story