சூப்பர் ஹிட் படத்தில் நயன்தாராவுக்குப் பதில் ஜான்வி கபூர்!

சூப்பர் ஹிட் படத்தில் நயன்தாராவுக்குப் பதில் ஜான்வி கபூர்!

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் யோகிபாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாராவை ரொமான்ஸ் செய்யும் யோகிபாபுவின் நடிப்பு மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

Kolamavu Kokila Review: An inconsistent, problematic dark comedy ...

அதையடுத்து கோலமாவு கோகிலா படம் கன்னட மொழியில் ரீமேக் ஆவதாகவும் தொலைக்காட்சி நடிகை ரஷிதா ராம் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது கோலமாவு கோகிலா படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. அந்தப் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சூப்பர் ஹிட் படத்தில் நயன்தாராவுக்குப் பதில் ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர் நடிக்க இருக்கும் இத்திரைப்படத்தை சித்தார்த் சென்குப்தா எனப்வர் இயக்குகிறார். கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் சார்பாக ஆனந்த் எல் ராய் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஜான்வி கபூர் கடைசியாக குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் படத்தில் விமானப்படை விமானியாக நடித்திருந்தார்.

Share this story