தனுஷ், சந்தானம் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்…

தனுஷ், சந்தானம் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்…

முன்னணி நடிகர்கள் தனுஷ், சந்தானம் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரானா பிரச்சனையால் கடந்த 9 மாதங்களாக திரையரங்குகள் மூடிக்கிடந்தன. ஊரடங்கு தளர்வு காரணமாக திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் முதல் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்தது அரசு.

தனுஷ், சந்தானம் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்…

கொரானா காரணமாக வேறு வழியின்றி ஓடிடியில் மட்டுமே சில படங்கள் வெளியாகின. ஆனால் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் வெளியாகாமல் இருந்தது.

தனுஷ், சந்தானம் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்…

இந்நிலையில் கடந்த பொங்கலையொட்டி விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய இரு படங்கள் வெளியிடப்பட்டன. ரசிகர்கள் அமோக ஆதரவுடன் இப்படங்கள் வெற்றிப்பெற்றன. இதையடுத்து அடுத்தடுத்த படங்களை திரையரங்கில் வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்தன.

தனுஷ், சந்தானம் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்…

அதன்படி வரும் பிப்ரவரி 12ம் தேதி காதலர் தினத்தையொட்டி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதேபோன்று இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் படமும் வெளியாகவுள்ளது. இந்த படம் முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this story