மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் ரீமேக்கில் ஜான்வி கபூர்!

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் ரீமேக்கில் ஜான்வி கபூர்!

மலையாளத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ‘ஹெலன்’ படம் அங்கு நல்ல வரவேற்பு பெற்றது. அதையடுத்து, அந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளை வாங்க கடும் போட்டி நிலவியது.
ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் ரீமேக்கில் ஜான்வி கபூர்!
தற்போது ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமைகளை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் அவரது மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரெஸ்டாரண்டில் வேலைபார்க்கும் ஒரு பெண் அங்குள்ள குளிர் பதப்படுத்தும் அறையில் ஒரு இரவு முழுவதும் மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி போராடி வெளியே வருகிறாள் என்பதே இந்தப் படத்தின் கதை.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் ரீமேக்கில் ஜான்வி கபூர்!
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று தெரிகிறது. போனி கபூருடன் இணைந்து ZEE மியூசிக் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர் ஜான்வி கபூர் குஞ்சன் சக்சேனா படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

Share this story