பூஜா ஹெக்டேவுக்குப் பதிலாக களமிறங்கும் ஜான்வி கபூர்!

பூஜா ஹெக்டேவுக்குப் பதிலாக களமிறங்கும் ஜான்வி கபூர்!

தென்னிந்திய ஹிட் படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆவது அதிகரித்து வருகிறது. கடைசியாக அர்ஜுன் ரெட்டி படம் இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
பூஜா ஹெக்டேவுக்குப் பதிலாக களமிறங்கும் ஜான்வி கபூர்!
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹேக்டே, ஜெயராம், தபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளியான ‘ஆல வைகுண்டபுரம்லோ’ படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அல்லு அர்ஜுன் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையும் அந்தப் படத்திற்குக் கிடைத்தது.
பூஜா ஹெக்டேவுக்குப் பதிலாக களமிறங்கும் ஜான்வி கபூர்!
இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமைகளை வாங்க கடும் போட்டி நிலவியது. சில தினங்களுக்கு முன் அளவைகுண்டபுரம்லோ படத்தின் ரீ-மேக்கில் ஷாகித் கபூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
பின்னர் ரோகித் தவான் இயக்கத்தில் கார்த்திக் ஆரியன் இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  தற்போது ஆல வைகுண்டபுரம்லோ படத்தில் பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் ஆர்யனும் ஜான்வி கபூரும் ஏற்கனவே தோஸ்தானா 2 என்ற படத்தில் நடித்து வருகின்றனர். ஜான்வி கபூர் குஞ்சன் சக்சேனா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்திய விமானப்படை பெண் விமானி ஒருவரின் வாழக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது.
கார்த்திக் ஆர்யன் வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதால் அவற்றை முடித்துவிட்டு 2021 ஆம் ஆண்டு முதல் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story