ஜுராசிக் பார்க் இயக்குனரின் வாழ்க்கை படமாகிறது… முக்கிய வேடத்தில் மிச்செல் வில்லியம்ஸ்…

ஜுராசிக் பார்க் இயக்குனரின் வாழ்க்கை படமாகிறது… முக்கிய வேடத்தில் மிச்செல் வில்லியம்ஸ்…

தனது குழந்தை பருவ வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தெரிவித்துள்ளார்.  

ஜுராசிக் பார்க் இயக்குனரின் வாழ்க்கை படமாகிறது… முக்கிய வேடத்தில் மிச்செல் வில்லியம்ஸ்…

பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் அழகிய வாழ்வியலை திரைப்படமாக தந்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். 1993-ஆம் ஆண்டு ஜுராசிக் பார்க் என்ற பெயரில் வெளியான இத்திரைப்படங்கள் உலக அளவில் சச்கைப்போடு போட்டன. டைனோசர் என்ற உயிரிழினம் இந்த பூமியில் வாழ்ந்ததா என நமக்கு தெரியவில்லை என்றாலும், அதை கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் மூலம் நம் கண்ணே திரைப்படமாக தத்ரூபமாக காட்டியிருப்பார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.

ஜுராசிக் பார்க் இயக்குனரின் வாழ்க்கை படமாகிறது… முக்கிய வேடத்தில் மிச்செல் வில்லியம்ஸ்…

ஜுராசிக் பார்க் திரைப்படங்களை தொடர்ந்து வார் ஆப் த வேல்டு, த போஸ்ட், ஜாஸ், ரெடி இன் ப்ளேயர், முனிச், த போஸ்ட், எம்பயர் ஆப் த சன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரின் திரைக்கதையும், காட்சிகளாக்கப்பட்ட விதமும் உலக ரசிகர்களின் நெஞ்சில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்தன. இதுவுரை உலகின் தலைச்சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை 2 முறை பெற்றுள்ள இவர், மேலும் பல திரைப்படங்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.  

ஜுராசிக் பார்க் இயக்குனரின் வாழ்க்கை படமாகிறது… முக்கிய வேடத்தில் மிச்செல் வில்லியம்ஸ்…


தற்போது ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ என்ற படத்தை ரீமேக் செய்து வருகிறார் ஸ்பீல்பெர்க். 1960ம் ஆண்டு வெளியான இப்படத்தின் கதையை தற்காலத்திற்கு ஏற்றாற்போல் உருவாக்கி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் கொரோனாவால் முடங்கியது. இதையடுத்து மீண்டும் இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜுராசிக் பார்க் இயக்குனரின் வாழ்க்கை படமாகிறது… முக்கிய வேடத்தில் மிச்செல் வில்லியம்ஸ்…

இந்த படத்தை தொடர்ந்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனது சிறுவயதில் அரிஸோனா மாகாணத்தில் வளர்ந்தபோது நடந்த சம்பவங்களை வைத்து புதிய படத்தை உருவாக்க இருக்கிறார். 1950 மற்றும் 60 காலகட்டங்களில் நடப்பது போன்ற கதையம்சத்தில் இந்த படத்தின் திரைக்கதையை தற்போது எழுதி வருகிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். மிச்செல் வில்லியம்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Share this story