ராணா, விஷால் விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள காடன் படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட்!

ராணா, விஷால் விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள காடன் படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட்!

ராணா மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் கூட்டணியில் ‘காடன்‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ராணா டகுபதி மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பல வருடங்கள் செலவழித்து நடித்துள்ளார். நடிகை ஜோயா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் தெலுங்கில் ‘ஆரண்யா‘ என்ற பெயரில் வெளியிடப்பட இருக்கிறது. ஹிந்தியில் ‘ஹாதி மேரா சாதி’ என்ற பெயரில் வெளியாகிறது. படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

காடன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் படத்தின் வேலைகள் நிறைவடையாததால் ரிலீஸ் தள்ளிப் போனது.

ராணா, விஷால் விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள காடன் படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட்!

தற்போது காடன் படத்தின் ட்ரைலர் மார்ச் 6-ம் தேதி வெளியாகவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், மார்ச் 26-ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படத்தில் பல ஆக்ஷன் காட்சிகள், பல யானைகள் இடம் பெறும் காட்சிகள், ராணாவின் வித்தியாசமான நடிப்பு என்ற படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது.

Share this story