சிரஞ்சீவிக்காக ஹனிமூனைத் தள்ளிவைத்த காஜல்!

சிரஞ்சீவிக்காக ஹனிமூனைத் தள்ளிவைத்த காஜல்!

நடிகை காஜல் அகர்வால்(அக்டோபர் 30) நேற்று தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்தார். ஆடம்பரமாக நடந்த இந்தத் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். காஜல் திருமணத்தை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிரஞ்சீவிக்காக ஹனிமூனைத் தள்ளிவைத்த காஜல்!


திருமணத்திற்குப் பின்னும் தான் தொடர்ந்து நடிப்பேன் என்று காஜல் அகர்வால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது தனது திருமணத்திற்காக காஜல் இரண்டு வாரங்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. லாக்டவுனுக்கு முன்னர் காஜல் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போது அந்தப் படங்களில் நடித்துக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

சிரஞ்சீவிக்காக ஹனிமூனைத் தள்ளிவைத்த காஜல்!

இதனால் காஜல் தனது தேனிலவு திட்டத்தைக் கூட தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. காஜல் அகர்வால் தனது திருமணத்திற்கு பிறகு முதலாவதாக கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘ஆச்சர்யா’ படத்தில் இணைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆச்சார்யா படத்தை முடித்த பிறகுதான் காஜல்- கௌதம் ஜோடி தேனிலவிற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

சிரஞ்சீவிக்காக ஹனிமூனைத் தள்ளிவைத்த காஜல்!


ஆச்சார்யா படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட இருப்பதால் அதை விரைவில் முடிக்க சிரஞ்சீவி மும்முரம் காட்டி வருகிறார். எனவே தான் திருமணம் நடந்த சில நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

Share this story