"பெண்கள் என்ன அணிய வேண்டும் என நீங்கள் சொல்லத் தேவையில்லை"… கவிதா ரெட்டியை சாடிய காஜல் அகர்வால்!
சம்யுக்தா ஹெக்டே தாக்கப்பட்டது குறித்து கவிதா ரெட்டிக்கு காஜல் அகர்வால் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
நடிகை சம்யுக்தாவும் அவரது மூன்று நண்பர்களும் ஒரு வளையத்துடன் உடற்பயிற்சி செய்ய பெங்களூருவில் உள்ள அகரா லேக் பூங்காவிற்குச் சென்றுள்ளனர். அங்கு மேலே அணிந்திருந்த ஸ்போர்ட்ஸ் ஜாக்கட்டை கழற்றி விட்டு விளையாட்டு உள்ளாடையுடன்(Sports Bra) உடற்பயிற்சி செய்துள்ளனர். அப்போது கவிதா ரெட்டி என்பவர் இவர்கள் பொதுவெளியில் இந்த மாதிரி கவர்ச்சியான உடையில் இருப்பதாக அவற்றைப் பதிவு செய்யத் தொடங்கினார். பின்னர் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தை சம்யுக்தா மற்றொரு தொலைபேசியில் பதிவு செய்ததோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘லைவ்’ ஆக முழு சம்பவத்தையும் நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கினார்.
இந்த சம்பவம் சோசியல் மீடியாக்களில் விஸ்வரூபம் எடுத்தது. கவிதா ரெட்டிக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதையடுத்து கவிதா ரெட்டி சம்யுக்தாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
தற்போது இது குறித்து பதிவிட்டுள்ள காஜல் அகர்வால் “ஓ மை காட்! இப்படி கூட நாடாகும் என்று நம்பமுடியவில்லை. மிஸ் கவிதா ரெட்டி, உங்கள் கோபப் பிரச்சினைகளை நீங்கள் தான் சமாளிக்க வேண்டும். இந்த விரக்தி / ஆக்கிரமிப்பு எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இளம் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வதை விட அதிக விஷயங்கள் உள்ளன. நாம் அனைவரும் அவரவர் சொந்த காரியங்களை மட்டுமே பார்ப்பது சிறந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Omg Sam! can’t believe this even happened! Miss Kavitha reddy,u need to deal with ur anger issues n figure out where this frustration/aggression comes from,a lot more than what young girls choose to wear, doing their own thing-high time we all mind our own affairs! #ThisIsWrong https://t.co/clxoGE6eRC
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) September 6, 2020
இதற்கு பதிலளித்த சம்யுக்தா கவிதா ரெட்டி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
Thank you so much kajal ❤
She just issued an apology 🎊🎉— Samyuktha Hegde (@SamyukthaHegde) September 6, 2020