ரசிகருக்காக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்ற நடிகர்!

ரசிகருக்காக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்ற நடிகர்!

உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டுக்குச்சென்று கலையரசன் ஆறுதல் கூறியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘நந்தலாலா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கலையரசன். தொடர்ந்து பல படங்களில் துணை நடிகராக தனது முத்திரையைப் பதித்தார். குறிப்பாக, கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் இவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது.

ரசிகருக்காக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்ற நடிகர்!

அத்துடன், ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார் கலையரசன். ஆனால், அந்தப் படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கலையரசன்.

இதற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து, தன்னுடைய உடலைக் கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார் கலையரசன். இந்த வீடியோ தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேநேரத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் ரசிகர் ஒருவருக்கு கலையரசன் உதவி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் தினேஷ். கலையரசன் ரசிகர் மன்ற நிர்வாகியான இவர், நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட கலையரசன், பாண்டிச்சேரியில் உள்ள தினேஷ் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அத்துடன், தினேஷுக்குத் தேவைப்படும் பண உதவியையும் செய்த கலையரசன், மேல் சிகிச்சைக்கு சென்னையில் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

Share this story