நடிகை சாய் பல்லவிக்கு காமெடி நடிகர் ஹீரோவா ?

நடிகை சாய் பல்லவிக்கு காமெடி நடிகர் ஹீரோவா ?

நடிகை சாய் பல்லவி, நடிகர் காளி வெங்கட்டின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சாய் பல்லவிக்கு காமெடி நடிகர் ஹீரோவா ?

கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாய் பல்லவி. மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம், ரசிகர்களால் பாராட்டைப்பெற்றது. இந்திய அளவில் புகழ்பெற்ற சாய் பல்லவி, தமிழில் மாரி 2, என்.ஜி.கே படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவிக்கு காமெடி நடிகர் ஹீரோவா ?

இதைத்தொடர்ந்து ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதேபோன்று வெற்றி மாறன் இயக்கத்தில் ரிலீசான ஆந்தாலஜி படமான ’பாவக்கதைகள்’ படத்தில் சாய்பல்லவி நடித்தார்.  இதில் இவரது நடிப்பு பேசும்படியாக உள்ளது.

நடிகை சாய் பல்லவிக்கு காமெடி நடிகர் ஹீரோவா ?

இந்நிலையில் காமெடி நடிகர் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு முன்னணி நடிகை காமெடி நடிகர் படத்தில் நடிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story