Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

“போட்டியா இருக்க வேண்டியது, வாடான்னு தரம் கொறஞ்சிடுச்சி”… செங்கோலைக் கையிலெடுத்த கமல்! இந்த வார பிக்பாஸ் சம்பவம்!

போட்டியா இருக்கவேண்டியது போடா வாடா னு தரம் குறைஞ்சுடுச்சி என்றவாறு அனல் பறக்க ஆண்டவர் விஜயம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வாரவாரம் ஆரவாரம் என்ற நிலையில் வார இறுதியில் என்ட்ரி கொடுத்து ஹவுஸ்மேட்க்ளுக்கு குறும்படம் போட்டுக் காண்பிக்கும் கமல் இந்த வாரம் செங்கோலைக் கையிலெடுத்துள்ளார்.

போட்டியாளர்கள் வீட்டினுள் நட்பாகப் பழக நினைத்தாலும் பிக்பாஸ் குழுவினர் அப்படி நடக்க விடமாட்டார்கள். அவர்களுக்கு விதவிதமான டாஸ்க்குகள் கொடுத்து ஒருவரை ஒருவர் தலை பிடி சண்டை போட வைத்துவிடுவார்கள். அப்போ தான் போட்டி பரபரப்பா போகும்.

அந்த வகையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் நாடா? காடா? அரக்கர்கள் ஒரு பக்கம். நாட்டு மக்கள் இன்னொரு பக்கம். இந்த டாஸ்க் மிகப்பெரிய ரகளையேவே ஏற்படுத்திவிட்டது.

சுரேஷ் செங்கோலால் சுரேஷ் சனத்தை தாக்க, கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர் வாடா போடா என்ற வார்த்தைகளை பிரயோகப்டுத்தினார்.

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் வருகை தரும் சனிக்கிழமையான இன்று நடப்போகும் சம்பவங்களுக்காக பிக்பாஸ் ரசிர்கர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

நாளை பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். அந்த வகையில் இன்று வெளியாக முதல் ப்ரோமோவில், கொளுத்தி போடுறேன், கொளுத்தி போடுறேன் சொன்னவரு கையிலேயே வெடிச்சிடுச்சி; போட்டியா இருக்க வேண்டியது போடா… வாடான்னு தரம் கொறஞ்சிடுச்சி. இது (செங்கோல்) யார் கையில இருக்கணும்ங்குறது ரொம்ப முக்கியம் .இருக்குற நிலைமையை பார்த்த நம்ம கையில எடுக்கணும் போலருக்கு” என்று வழக்கம் போல தொகுத்து வழங்குவதோடு சற்று அரசியலையும் இறக்கிவிட்டுச் செல்கிறார்.

அடுத்த ப்ரோமோவில் இந்த சண்டையில் சனம்-க்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையைத் தூக்குங்கள் என்று சொன்னதும் பெரும்பாலானோர் கையைத் தூக்கிவிட்டனர். அடுத்து வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற இங்கீதத்தை சனம் இழந்துவிட்டார்கள் என்றும் கமல் கூறுகிறார்.

இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷன் லிஸ்டில் ஆஜித், பாலா, சுரேஷ். ஆரி, அனிதா உள்ளிட்ட 5 பேர் உள்ளனர். இவர்களில் யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்!

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!