16 ஆண்டுகளுக்குப் பிறகு காக்கிச் சட்டை அணியும் கமல்!?

16 ஆண்டுகளுக்குப் பிறகு காக்கிச் சட்டை அணியும் கமல்!?

தேர்தல் களப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் தேர்தல் முடிந்ததை அடுத்து மீண்டும் சினிமா பக்கம் கவனம் திரும்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் விக்ரம் படத்திற்காகத் தயாராகியுள்ளார். நேற்று லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் உடன் தனி விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு காக்கிச் சட்டை அணியும் கமல்!?

விக்ரம் படம் குறித்த தற்போதைய அப்டேட் என்னவென்றால், கமல்ஹாசன் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். தூங்காவனம் படத்தின் கமல் போலீசாக நடித்திருந்தாலும் அந்தப் படத்தில் காக்கிச் சட்டையில் அவர் தோன்றவில்லை. 2006-ன் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருந்தார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு காக்கிச் சட்டை அணியும் கமல்!?

கமல் இந்தப் படத்தில் ஒரு கைதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் ஒரு சிறைக் கைதி போலீசை காப்பாற்றுவதாக திரைக்கதை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் போலீஸ் கைதியைக் காப்பாற்றுவதாக திரைக்கதை அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு காக்கிச் சட்டை அணியும் கமல்!?

தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் பஹத் பாசில் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

Share this story