கமல் நடிப்பின் பகவத் கீதை, ரஜினி நடிப்பின் கடவுள்… கேஜிஃஎப் ராக்கி பாய் புகழாரம்!

கமல் நடிப்பின் பகவத் கீதை, ரஜினி நடிப்பின் கடவுள்… கேஜிஃஎப் ராக்கி பாய் புகழாரம்!

கேஜிஃஎப் நடிகர் யாஷ் கமல்ஹாசன் நடிப்பின் பகவத் கீதை மற்றும் ரஜினிகாந்த் நடிப்பின் கடவுள் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் யாஷ் தற்போது இந்தியாவின் ஐகானாக மாறியுள்ளார். கேஜிஃஎப் என்ற ஒற்றைப் படத்தின் இந்திய மார்க்கெட்டில் அழுத்தமாக கால் தடம் பதித்துவிட்டார். கேஜிஃஎப் இரண்டாம் பாகத்திற்கு இந்தியா முழுவதும் இமாலய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கமல் நடிப்பின் பகவத் கீதை, ரஜினி நடிப்பின் கடவுள்… கேஜிஃஎப் ராக்கி பாய் புகழாரம்!

யாஷ் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் நடிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டார்.

“கமல் சார் நடிப்பின் பகவத் கீதை. ரஜினிகாந்த் கடவுள் மற்றும் எங்கள் தலைவா, ஷாருக் கான் அனைவருக்கும் ஒரு உத்வேகம் மற்றும் ஒரு மேதை” என்று தெரிவித்துள்ளார்.

கமல் நடிப்பின் பகவத் கீதை, ரஜினி நடிப்பின் கடவுள்… கேஜிஃஎப் ராக்கி பாய் புகழாரம்!

அதையடுத்து பாலிவுட்டில் யாருடன் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு “நவாசுதீன் சித்திக்” என்று உடனே பதிலளித்தார்.

யாஷ் தற்போது கேஜிஃஎப் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறார். இந்தாண்டு ஜூலை 16 ஆம் தேதி கேஜிஃஎப் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்தப் படமும் வசூலில் இமாலய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story