பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தேனியில் அடிச்சு தூக்கும் கமல்.!?

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தேனியில் அடிச்சு தூக்கும் கமல்.!?

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், முக்கிய கட்சிகள் பலவும் இப்போதே பரபரப்பாக பிரச்சாரத்தில் இறங்கிவிட்டது. அந்த வகையில் இரண்டு நாளைக்கு முன்பு மதுரைக்கு போய் மாஸ் காட்டியிருக்கிறார் கமல். பணமும் பிரியாணியும் கொடுத்துச் சேர்த்த கூட்டமல்ல இது. உணர்வால் எழுந்த கூட்டம் என்று மைக்கைப் பிடித்துச் சொன்ன பேச்சுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில், மன்னிக்கணும் தொண்டர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்!

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தேனியில் அடிச்சு தூக்கும் கமல்.!?

சில ஊர்களில் மட்டும் மக்களைச் சந்தித்துப் பேசலாம் என்று முடிவெடுத்துப் போன கமல், இனி எலெக்ஷன் முடியும் வரை தென் மாவட்டங்களை விட்டு வர மாட்டார் போல! அதற்கு உதாரணமாக ஒரு தகவலைத் தட்டிவிட்டார் உள்ளூர் தம்பி ஒருவர்.

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தேனியில் அடிச்சு தூக்கும் கமல்.!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தேனி மாவட்டத்தைச் சுற்றித்தான் நடப்பதாக இருந்தது. இந்த மாத இறுதியில் இயக்குனர் டீம் லோகேஷன் பார்க்கப் போவதாக இருந்தார்களாம். அவர்களை உடனடியாக தேனிக்கு வரச் சொல்லியிருக்கிறார். அப்புறம் தான் லொகேஷன் பார்க்க கமலும் கூட வரப்போகிறார் என்பது இயக்குனர் டீமுக்கு தெரிய வந்திருக்கிறது.

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தேனியில் அடிச்சு தூக்கும் கமல்.!?

2003 ம் ஆண்டு தேனிக்கு பக்கத்தில் ‘விருமாண்டி’ படப்பிடிப்புக்காக தேனிக்கு அருகிலுள்ள தேவாரத்தில் செட்டுப் போட்டு படப்பிடிப்பைத் தொடங்கிய வேகத்திலேயே பஞ்சாயத்தாகி படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டியதாப் போச்சு. காரணம், இந்தப் படத்துக்கு ஏற்கனவே வைத்திருந்த டைட்டில் ‘சண்டியர்’ அதெப்படி இப்படியொரு டைட்டில் வைக்கலாம் என்று ஒரு தலைவர் கொளுத்திப்போட… டைட்டிலை மாற்றி சென்னையிலுள்ள கேம்பகோலாவில் சேட்டுப் போட்டு மொத்தப் படத்தையும் எடுத்தார் கமல்.

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தேனியில் அடிச்சு தூக்கும் கமல்.!?

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி மாவட்டத்துக்கு வந்திருக்கும் கமல், இப்போது வெறும் நடிகர் மட்டுமல்ல: ஒரு கட்சியின் தலைவரும் கூட. அதுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துதான் தென் மாவட்ட பிரச்சார நாட்களை நீட்டித்திருக்கிறாராம் கமல். எங்கூர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க… ‘ஆடு மேச்சது மாதிரியும் இருக்கணும் : அண்ணனுக்கு பொண்ணு பாத்தமாதிரியும்’ ஆழ்வார் பேட்டை ஆண்டவருக்கு இது தெரிஞ்சிருக்காதா என்ன.!? பிரச்சாரத்துக்கு பிரச்சாரம் பண்ணின மாதிரியும் ஆச்சு : படத்தையும் முடிச்ச மாதிரியும் ஆச்சு. நீங்க அடிச்சு ஆடுங்க ஆண்டவரே.

Share this story