சீட் நுனியில் உட்கார வைத்த யதார்த்த சினிமா… 'கப்பெல்லா' பட விமர்சனம்!

சீட் நுனியில் உட்கார வைத்த யதார்த்த சினிமா… 'கப்பெல்லா' பட விமர்சனம்!

காலம் காலமாக நாம் பார்த்து வரும் சினிமாக்கள் அனைத்திலும் நடைமுறைக்கு சற்றும் பொருந்தாத மிகைப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையை ஹீரோ வாழ்ந்து வருவார். ஒரே நேரத்தில் 10 பேரை அடிப்பது வெளிநாட்டில் போய் பாடலுக்கு ஆடுவது என்று யதார்த்தத்தை விட்டு தொலை தூரம் கடந்து நிற்கும் சினிமாவை தான் நாம் இத்தனை நான் கண்டுகளித்து வந்தோம். இதற்கு விதிவிலக்காக சில படங்கள் அவ்வப்போது வந்து சினிமாவின் அழகியலைக் காப்பாற்றி வந்தன.
தற்போது சினிமா ரசிகர்களின் ரசனை மாற ஆரம்பித்துவிட்டது. நம் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அவற்றின் உண்மைத் தன்மை மற்றும் சுவை மாறாமல் அப்படியே யதார்த்தமாக எடுப்பதில் கைதேர்ந்தவர்கள் மலையாள சினிமாத்துறை. அப்படி ஒரு யதார்த்த படத்தை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
சீட் நுனியில் உட்கார வைத்த யதார்த்த சினிமா… 'கப்பெல்லா' பட விமர்சனம்!
ரோஷன் மேத்யூ, அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி ஆகியோர் நடித்து நெடிப்பிலிக்ஸில் வெளியான ‘கப்பெல்லா’ (Kappela) என்ற படத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் பார்த்துவிட்டு வந்து பதிவை படிக்கவும். ஸ்பாய்லெர் அலர்ட்!!!
படிப்பை பாதியில் கைவிட்ட ஒரு நடுத்தர பெண்ணிற்கும் ஏற்படும் காதல். அதன் மூலம் அவள் கற்றுக்கொள்ளும் பாடம்… இதுதான் படத்தின் மையக் கருத்து என்று சொல்லலாம்.
கேரளாவின் வயநாடு பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்தான் ஜெஸ்ஸி. இவளுக்கும் எல்லா பெண்களைப் போலவும் சில ஆசைகள், சில கனவுகள். ஜெஸ்ஸிக்கு எப்போதும் கடலின் மேல் ஒரு அதீத பிரியம் உண்டு… எந்தளவிற்கு என்றால் அவர்கள் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் கடல் வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு…
சீட் நுனியில் உட்கார வைத்த யதார்த்த சினிமா… 'கப்பெல்லா' பட விமர்சனம்!
வெகுளியான பெண்ணாக நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜெஸ்ஸி, ஒரு ராங் கால் மூலமாக காதலில் விழுகிறாள். அதே நேரத்தில், ஜெஸ்ஸிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கவே என்ன செய்வதென்று தெரியாமல் காதலனிடம் சொல்கிறாள். இருவரும் கோழிக்கோட்டில் சந்திக்க திட்டமிடுகின்றனர். ஜெஸ்ஸி காதலனை காண கோழிக்கோடு செல்கிறாள்.
பின்னர் படத்தின் வேறொரு கதைக்களம்… கோழிக்கோடு பகுதியில் ரவுடியாக வலம்வரும் ஒரு வாலிபனின் (ராய்) வாழ்க்கை மற்றும் அவனது காதல் காண்பிக்கப்படுகிறது.
சீட் நுனியில் உட்கார வைத்த யதார்த்த சினிமா… 'கப்பெல்லா' பட விமர்சனம்!
வெளியுலகம் தெரியாத ஜெஸ்ஸி காதலனைக் காண கோழிக்கோடு வந்தடைகிறாள். ஒரு சிறிய விபத்தில் ஜெஸ்ஸியைக் காண வரும் காதலனின் மொபைல் நமது ரவுடி கதாநாயகனிடம் மாட்டிக்கொள்கிறது. இதற்கு முன் காதலனனின் முகத்தைப் பாராத ஜெஸ்ஸியை ஏமாற்றி அழைத்துச் செல்கிறான் ராய். பின்னர் காதலன் ஜெஸ்ஸியைக் கண்டுபிடிக்க ராய் அங்கிருந்து கழன்று செல்கிறான். இதனால் காதலனுக்கும் ராய்க்கும் கைகலப்பு நிகழ்கிறது. பின்னர் ஒரு லாட்ஜில் ரூம் போடும் காதலன் ஜெஸ்ஸியை பெண் கடத்தல் கும்பலிடம் விற்க ஏற்பாடு செய்கிறான். அப்போது தான் தெரிகிறது ஜெஸ்ஸியின் காதலன், பெண்களை பேசி மயக்கி கடத்தும் கடத்தல்காரன் என்று. பின்னர் அந்த பேராபத்திலிருந்து ஜெஸ்ஸியைக் ராய் காப்பாற்றுகிறான்.
சீட் நுனியில் உட்கார வைத்த யதார்த்த சினிமா… 'கப்பெல்லா' பட விமர்சனம்!
ஜெஸ்ஸியாக நடித்த அன்னா பென்னின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. படம் ஆரம்பித்தவுடனே அனைத்து காட்சிகளும் கிளைமாக்ஸிற்காகவே உருவாக்கப்பட்டது போல தெரிந்தது. நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் காண்பிக்க சற்று மெனெக்கட்டுள்ளார்கள்.
இவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு வரும் ஜெஸ்ஸி, ராயிடம் ‘கடல காணிச்சு தரா’ என்று கேட்கும் காட்சியில் கடல் மீது அவளுக்கு இருக்கும் காதல் மீண்டும் நிரூபணம் ஆகிறது.
‘கபெல்லா’ பார்க்க வேண்டிய படம் தான்.

Share this story