யானை மீது கம்பீராக வரும் தனுஷ்… திட்டமிட்டபடி வெளியாகும் ‘கர்ணன்’…

யானை மீது கம்பீராக வரும் தனுஷ்… திட்டமிட்டபடி வெளியாகும் ‘கர்ணன்’…

யானை மீது தனுஷ் கம்பீரமாக வரும் புதிய போஸ்டரை வெளியிட்டு கர்ணன் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

யானை மீது கம்பீராக வரும் தனுஷ்… திட்டமிட்டபடி வெளியாகும் ‘கர்ணன்’…

மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இன்னல்களை போக்க போராடும் சாதாரண மனிதனின் கதையாக உருவாகியுள்ளது ‘கர்ணன்’. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யானை மீது கம்பீராக வரும் தனுஷ்… திட்டமிட்டபடி வெளியாகும் ‘கர்ணன்’…

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடல்களும் ஹிட்டடித்துள்ளன. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு தணிக்கைத்தறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் வரும் 9ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்து.

யானை மீது கம்பீராக வரும் தனுஷ்… திட்டமிட்டபடி வெளியாகும் ‘கர்ணன்’…

இதனால் படத்தின் டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் முதல் மூன்று ஹவுஸ்புல் ஆகிவிட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் கொரானா அச்சுறுத்தால் காரணமாக இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படம் நாளை வெளியாகிறது. இதை உறுதிப்படுத்த படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் தனுஷ் யாணை மீது ஏறி கம்பீரமாக வருவது போன்று உள்ளது. அதேபோன்று இந்த படத்தின் எப்டிஎஸ் காட்சி நாளை காலை 6மணிக்கு வெளியாகிறது. இதற்காக படக்குழு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Share this story