பரியேறும் பெருமாள் அமைதியாக சொன்னதை, கர்ணன் வாள் தூக்கி பேசியுள்ளான்… கர்ணன் திரைப்பட விமர்சனம்!

பரியேறும் பெருமாள் அமைதியாக சொன்னதை, கர்ணன் வாள் தூக்கி பேசியுள்ளான்… கர்ணன் திரைப்பட விமர்சனம்!

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘கர்ணன்’ தற்போது வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் என்னும் ஒரு படத்தின் மூலமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த மாரி செல்வராஜின் அடுத்த படம் என்பதால், படத்தின் மீது அதீத நம்பிக்கையும் சேர்ந்தே மக்களுக்கு ஏற்பட்டது என்பது நிதர்சனம். அந்த நம்பிக்கையைக் கர்ணன் காப்பாற்றியதா? என்பதைப் பார்ப்போம்.

தனுஷ் தற்போது முழுமையான நடிகராக பரிணாமமடைந்துவிட்டார். இனி எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் போகிற போக்கில் தட்டிவிட்டுச் செல்வேன் என்ற நிலை தான். அதுபோக தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரங்களை எழுதும் வேலை இயக்குனர்களுக்கு சற்று கடினம் ஆகி விட்டது தான். மேலும் சந்தோஷ் நாராயணின் இசையும் கூட சேர்ந்திருக்கிறது.

பரியேறும் பெருமாள் அமைதியாக சொன்னதை, கர்ணன் வாள் தூக்கி பேசியுள்ளான்… கர்ணன் திரைப்பட விமர்சனம்!

சரி படத்தின் கதைக்கு வருவோம். பேருந்து நிறுத்தம் என்ற அடிப்படை வசதி கூட இல்லாத கிராமம் தான் கதைக்களம். பேருந்து ஏற பக்கத்துக்கு ஊருக்குத்தான் செல்லவேண்டும். அம்மா, அக்கா, சகோதரியுடன் வாழ்ந்து வரும் தனுஷ். கௌரி ஒரு நாள் பேருந்து ஏற பக்கத்துக்கு கிராமம் செல்ல, அங்கு சிலர் கௌரியை துன்புறுத்த, கர்ணன் அவர்களை துவம்சம் செய்கிறார். இங்கிருந்து கதையின் அழுத்தம் கூட, பழிவாங்கும் படலம் உருவாகிறது.

ஊரில் ஓர் கலவரம் ஏற்பட அதை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரி தான் நட்டி. காவல் நிலையத்தை அடித்து நொறுக்குவதன் மூலம் தனுஷும் ஊர் மக்களும் நட்டியின் கோபத்திற்கு ஆளாகின்றனர். பின்னர் தன் ஊருக்கு வரும் ஆபத்திலிருந்து கர்ணன் தன் மக்களைக் காப்பாற்றினானா? என்பதே படத்தின் மீதி கதை.

பரியேறும் பெருமாள் அமைதியாக சொன்னதை, கர்ணன் வாள் தூக்கி பேசியுள்ளான்… கர்ணன் திரைப்பட விமர்சனம்!

மாரி செல்வராஜ் எப்போதும் போல அழுத்தமான கதையுடன் வந்துள்ளார். திரைப்படம் என்பதை பொழுதுபோக்கு அம்சம் என்ற போக்கினை உடைத்தெறிந்து மக்களின் வாழ்வியல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அதற்கு எதிராக அவர்கள் கிளெர்ந்தெழுந்த கதை என்று தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி வரும் முக்கிய இயக்குனராக நம்பிக்கையை விதைத்துள்ளார் மாரி செல்வராஜ்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை அழுத்தம் குறையாமல் செல்கிறது. நடிகர்கள் தேர்வு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. இந்தப் படத்தில் யோகிபாபு ஒரு காமெடி நடிகர் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து நடிப்பு என்னும் வரையறைக்குள் நுழைய ஆரம்பித்திருக்கிறார். அவரின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. லால், ரஜிஷா விஜயன் என எல்லோரிடமும் நல்ல நடிப்பு எதிரொலிக்கிறது. தனுஷின் சகோதரியாக நடித்துள்ள லட்சுமி ப்ரியாவும் சிறந்த நடிப்பால் கைதட்டல் பெறுகிறார்.

பரியேறும் பெருமாள் அமைதியாக சொன்னதை, கர்ணன் வாள் தூக்கி பேசியுள்ளான்… கர்ணன் திரைப்பட விமர்சனம்!

மண் சார்ந்த கதை என்பதால் அந்த மண்ணின் மாந்தர்களை நடிக்க வைப்பவர் மாரி செல்வராஜ். அதிலும் அவரது தேர்வு சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் வேரூன்றுகிறது. படம் முழுவதும் புல்லரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சந்தோஷ் நாராயணன் இந்த வருடத்தின் நம்பிக்கை இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளதை கர்ணன் படத்தில் பார்க்க முடிகிறது. கண்டா வரச் சொல்லுங்க பாடல் இசை, காட்சியமைப்புகள் என, ஒரு பாடலே படத்தின் வெற்றியை தூக்கி நிறுத்துகிறது. மற்ற பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.

பரியேறும் பெருமாள் அமைதியாக சொன்னதை, கர்ணன் வாள் தூக்கி பேசியுள்ளான்… கர்ணன் திரைப்பட விமர்சனம்!

அசுரன் படத்துடன் கர்ணன் படத்தை ஒப்பிட்டு விமர்சனம் முன்வைப்பதை அதிகம் பார்க்க முடிகிறது. வெக்கை என்னும் நாவலை தனுஷுக்கு ஏற்றவாறு பக்கா கமர்ஷியல் ஆக வடிவமைத்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் மாரி செல்வராஜ் தனுஷுக்காக தன் திரைக்கதையில் தியாகம் செய்யாமல் சொல்ல வந்த விஷயங்களை அழுத்தமாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார்.

பரியேறும் பெருமாளும், கர்ணனும் ஒரே விஷயத்திற்காகத் தான் போராடுகிறார்கள். பரியேறும் பெருமாள் அகிம்சை முறையில் தனக்கான உரிமை கிடைக்க வேண்டுமே போராடினான். அதையே கர்ணன் வாள் தூக்கி நின்று போராடியுள்ளான். அவ்ளோ தான்.

படத்தின் நீளம் அதிகமாகத் தென்பட்டது ஒன்று தான் குறை. மற்றபடி தரமான படம்.

Share this story