நல்ல படம்.. மிஸ் பண்ணாம பாருங்க… கர்ணனை புகழ்ந்த விஜய் சேதுபதி!

நல்ல படம்.. மிஸ் பண்ணாம பாருங்க… கர்ணனை புகழ்ந்த விஜய் சேதுபதி!

‘கர்ணன்’ படத்தை மிஸ் பண்ணாம பாருங்க என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தனுஷின் அசத்தலான நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்துள்ளது ‘கர்ணன்’.  பரியேறும் பெருமாள் படத்திற்கு விட ஒருபடி மேலே சென்று ஹிட் கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளை வாள் தூக்கி போராடி பெற்றுக்கொடுத்துள்ளான் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோன்று பிரபலங்களும் இந்த படம் குறித்து தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், இந்த படம் நல்ல படம், மிஸ் பண்ணாம பாருங்க என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி வெளியிட்டுள்ள பதிவில், கர்ணன்…இன்னும் பிரமிப்பு அகலவில்லை…அதிர்வுகள் ஓயவில்லை…வென்றான்…தம்பி மாரி செல்வராஜ் அடுத்த தளத்திற்கு உயர்ந்து விட்டார்…உழைத்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்…என்று கூறியுள்ளார்.

Share this story