நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின்னர் அமேசான் பிரைமில் வெளியானது ‘கர்ணன்’!

நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின்னர் அமேசான் பிரைமில் வெளியானது ‘கர்ணன்’!

தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கர்ணன் படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பெரும்பாலும் நேர்மறை விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்களே கிடைத்தன. தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகவும் இந்தப் படம் பார்க்கப்படுகிறது என்று சொன்னாலும் மிகையாகாது.

நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின்னர் அமேசான் பிரைமில் வெளியானது ‘கர்ணன்’!

கர்ணன் திரைப்படம் ஓடிடி-யில் எப்போது வெளியாகும் என்று அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மே 14-ம் தேதி கர்ணன் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ‘கர்ணன்’ திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கர்ணன் படத்தைப் பார்க்காதவர்கள் உடனே போய் மிஸ் பண்ணாம பாருங்க!

Share this story