தனுஷின் கர்ணன் படத்தின் ரிலீஸ் எப்போது ? டீசரை வெளியீட்டது படக்குழு

தனுஷின் கர்ணன் படத்தின் ரிலீஸ் எப்போது ? டீசரை வெளியீட்டது படக்குழு

தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் ரிலீஸ் எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் கர்ணன் படத்தின் ரிலீஸ் எப்போது ? டீசரை வெளியீட்டது படக்குழு

தமிழ், இந்தி என வரிசையாக படங்களை வைத்துகொண்டு நேரமில்லாமல் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இவர் நடிப்பில் வெளியே வரவிருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் முடிந்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. அடுத்த மாதம் இந்த படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

தனுஷின் கர்ணன் படத்தின் ரிலீஸ் எப்போது ? டீசரை வெளியீட்டது படக்குழு

இதையடுத்து கர்ணன், இந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் ’நானே வருவேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். தொடந்து பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தில் ஹீரோயினாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

தனுஷின் கர்ணன் படத்தின் ரிலீஸ் எப்போது ? டீசரை வெளியீட்டது படக்குழு

தனுஷின் 41வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட படத்தின் தயாரிப்பாளர் கலை எஸ்.தாணு, கர்ணன் வெளியிட்டு அறிவிப்பு மற்றும் டீசரை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ட்வீட் செய்துள்ளார். அதில் ‘வாள் தூக்கி நின்னான் பாரு, வந்து சண்டபோட்ட எவனும் இல்ல’ என குறிப்பிட்டுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story