மாரி செல்வராஜ் பிறந்தநாளில் வெளியாகும் ‘கர்ணன்’ டீசர்!?

மாரி செல்வராஜ் பிறந்தநாளில் வெளியாகும் ‘கர்ணன்’ டீசர்!?

இயக்குனர் மாரி செல்வராஜின் பிறந்தநாளில் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘கர்ணன்‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மாரி செல்வராஜ் பிறந்தநாளில் வெளியாகும் ‘கர்ணன்’ டீசர்!?

கர்ணன் படத்திலிருந்து தற்போது வரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. கண்டா வரச் சொல்லுங்க மற்றும் பண்டாரத்தி புராணம் என வெளியான இரண்டு பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஒவ்வொரு நாளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மாரி செல்வராஜ் பிறந்தநாளில் வெளியாகும் ‘கர்ணன்’ டீசர்!?

இந்நிலையில், தனுஷ் கர்ணன் டீசர் மிக விரைவில் என்று ட்வீட் செய்ததை அடுத்து கர்ணன் படத்தின் டீசர் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களால் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

வரும் மார்ச் 7-ம் தேதி இயக்குனர் மாரி செல்வராஜின் பிறந்தநாளாம். அதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. எனவே கர்ணன் படத்தின் டீசர் மாரி செல்வராஜின் பிறந்தநாளில் வெளியாக அதிக வாய்ப்பிருக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Share this story