கையில் சாட்டையுடன் மிரட்டல் லுக்கில் கார்த்தி… ‘சுல்தான்’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

கையில் சாட்டையுடன் மிரட்டல் லுக்கில் கார்த்தி… ‘சுல்தான்’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

விஜயதசமி திருநாளான இன்று பல படங்களின் அப்டேட் வெளியாகி வருகிறது. சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் ட்ரைலர் கூட இன்று வெளியானது. அந்த வரிசையில் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கையில் சாட்டையுடன் கம்பீரமாக காணப்படுகிறார் கார்த்தி.

கையில் சாட்டையுடன் மிரட்டல் லுக்கில் கார்த்தி… ‘சுல்தான்’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தான்னா இருவரும் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, விவேக் -மெர்வின் இசையமைத்துள்ளனர். சுல்தான் படம் தான் கார்த்தி சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம்.

Image

பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கார்த்தி “அன்புள்ள சகோதர சகோதரிகளே, உங்கள் அன்பும் பாராட்டுதலும் எங்களைத் தொடர்ந்து செல்ல வைக்கிறது! சுல்தானின் முதல் பார்வையை உங்களுக்குக் கொண்டு வருகிறோம். இது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்! உங்கள் மீது எப்போதும் அன்பு வைத்துள்ளேன் நண்பர்களே!” என்று தெரிவித்துள்ளார்.

சுல்தான் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story