விஜயதசமி அன்று கார்த்தி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!

விஜயதசமி அன்று கார்த்தி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தான்னா நடிப்பில் ‘சுல்தான்’ படம் உருவாகி வருகிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, விவேக் -மெர்வின் இசையமைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ படத்தில் நடித்து வந்த போதே ‘சுல்தான்’ படத்திலும் கார்த்தி கவனம் செலுத்தி வந்துள்ளார்.

Image

சமீபத்தில் தான் சுல்தான் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடத்தப்பட்டது.

பின்னர் “படப்பிடிப்பு நிறைவடைந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படம் குறித்து நாங்கள் கேட்ட நாள் முதல் இன்று வரை, இந்தக் கதை தொடர்ந்து எங்களை உற்சாகப்படுத்துகிறது.” என்று தெரிவித்திருந்தார். சுல்தான் திரைப்படம் தான் அவர் நடித்த படங்களில் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றும் தெரிவித்திருந்தார்.

விஜயதசமி அன்று கார்த்தி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!

தற்போது சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட் வெளியாகியுள்ளது. அக்டோபர் 26-ம் தேதி அதாவது விஜயதசமி அன்று காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

Share this story