‘பிசாசு-2’ படத்திற்காக உருக வைக்கும் மெலோடி பாடலை கம்போஸ் செய்த கார்த்திக் ராஜா… மிஷ்கின் பகிர்வு!

‘பிசாசு-2’ படத்திற்காக உருக வைக்கும் மெலோடி பாடலை கம்போஸ் செய்த கார்த்திக் ராஜா… மிஷ்கின் பகிர்வு!

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பிசாசு 2 படத்திற்காக உருக வைக்கும் மெலோடி பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பேய் என்றால் கொடூரமாக இருக்கும், மனிதர்களை பழிவாங்கும் என்ற வழக்கமான கிளிஷேவை மாற்றி மனிதனுக்கும் பேய்க்கும் காதல் இருப்பதாகக் காண்பித்திருந்தார். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

‘பிசாசு-2’ படத்திற்காக உருக வைக்கும் மெலோடி பாடலை கம்போஸ் செய்த கார்த்திக் ராஜா… மிஷ்கின் பகிர்வு!

அதையடுத்து கடந்த மாதம் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக மிஷ்கின் அறிவித்தார். அதில் ஆன்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். சைக்கோ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ராக்ஃபோர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

சற்று வித்தியாசமாக பிசாசு 2 படத்திற்கு இசையமையக்க கார்த்திக் ராஜாவை மிஷ்கின் ஒப்பந்தம் செய்திருந்தார்.

'பிசாசு-2' படத்திற்காக உருக வைக்கும் மெலோடி பாடலை கம்போஸ் செய்த கார்த்திக் ராஜா... மிஷ்கின் பகிர்வு!

கார்த்திக் ராஜா இசைஞானியின் மகன் என்பது அனைவர்க்கும் தெரிந்த செய்தி தான். இருந்தாலும் தன் அப்பா சினிமாவில் கண்ட உயரத்தை பாதியெனும் கூட கார்த்திக் ராஜாவால் நிரப்பமுடியவில்லை. ஆனால் யுவன் தனக்கென்று தனி இசை ராஜாங்கத்தை உருவாகிவிட்டார்.

90-களில் சில படங்களுக்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார். ஆனாலும் இவர் இசையமைத்த படங்கள் பெரும்பாலானவை வெற்றியடையவில்லை. அதனால் இசையமைத்தில் இருந்து நீண்ட காலத்திற்கு விலகியிருந்தார் கார்த்திக் ராஜா. கடைசியாக ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் பின்னணி இசை மட்டும் அமைத்திருந்தார்.

‘பிசாசு-2’ படத்திற்காக உருக வைக்கும் மெலோடி பாடலை கம்போஸ் செய்த கார்த்திக் ராஜா… மிஷ்கின் பகிர்வு!

தற்போது கார்த்திக் ராஜா பிசாசு 2 படத்தின் மூலமாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். பிசாசு 2 படத்திற்காக உருக வைக்கும் மெலோடி பாடல் ஒன்றை கார்த்திக் ராஜ கம்போஸ் செய்துள்ளதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

‘பிசாசு-2’ படத்திற்காக உருக வைக்கும் மெலோடி பாடலை கம்போஸ் செய்த கார்த்திக் ராஜா… மிஷ்கின் பகிர்வு!

Share this story