“நானே கிழவினா, அப்போ உங்க அஜித் சார்”… கஸ்தூரி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே மீண்டும் ஏற்படும் மோதல்!

“நானே கிழவினா, அப்போ உங்க அஜித் சார்”… கஸ்தூரி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே மீண்டும் ஏற்படும் மோதல்!

நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை அவ்வப்போது தெரிவித்து வருவார்.
சமீபத்தில் கூட வனிதா திருமணம் குறித்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து இருவருக்கும் ட்விட்டரில் கருத்துப் போர் ஆரம்பித்தது.
“நானே கிழவினா, அப்போ உங்க அஜித் சார்”… கஸ்தூரி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே மீண்டும் ஏற்படும் மோதல்!
ஏற்கனவே கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே மோதல் இருந்தது. அவர்கள் ஆபாசமாக பதிவிட்டிருந்தவற்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, கண்டனம் தெரிவித்திருந்தார் கஸ்தூரி. தற்போது மீண்டும் ஒரு பிரச்னை தலை தூக்கியுள்ளது.
ட்விட்டரில் பயனர் ஒருவர் கஸ்தூரி நடித்த படத்தின் பாடலை பதிவிட்டு “இது நம்ம கஸ்தூரி கிழவி தானே, அந்த காலத்தில் சரியான ஃபிகரா இருந்திருப்பா போல” என்று கூறியிருந்தார்.
5 வயது குறைந்தவள்
 
மேலும் அந்தப் பதிவில் #Ajithkumar #Valimai போன்ற ஹாஷ்டாக்குகளை பயன்படுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கஸ்தூரி “எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? Ajith sir கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு?
இதுல காமெடி என்னன்னா கஸ்தூரி கிழவி அஜித் சாரை விட ஐந்து வயது இளையவள். ஹையோ, ஹையோ” என்று பதிலளித்துள்ளார்.


இது மீண்டும் அஜித் ரசிகர்களும் கஸ்தூரிக்கும் இடையே மோதல் ஏற்பட காரணமாக அமையலாம்!

Share this story