காத்து வாக்குல “ரெண்டு காதல்” பாடல் வெளியானது!

காத்து வாக்குல “ரெண்டு காதல்” பாடல் வெளியானது!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் லலித் குமார் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

Image

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பாடலான ரெண்டு காதல் பாடல் வெளியாகியுள்ளது.

நானும் ரௌடி தான் படத்திற்குப் பின்னர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். மேலும் சமந்தாவும் இப்படத்தில் இணைந்துள்ளார். எனவே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விக்னேஷ் சிவனின் ஹியூமர் கதைக்களத்துடன் ரொமான்ஸ் சேர்ந்து பார்வையாளர்களுக்கு நல்ல ட்ரீட் ஆக அமையும் என்று எதிர்பார்ப்போம்!

Share this story