Monday, April 12, 2021

புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!

நடிகர் யோகிபாபு ஒரு புதிய படத்தில் புதையல் வேட்டைக்காரராக நடிக்கவுள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் ராஜ்....

Movie Stills

கவின் – அமிர்தா ஐயர் இணைந்து நடிக்கும் ‘லிப்ட்’… மிரட்டும் மோஷன் போஸ்டர்…

பிக்பாஸ் கவின் – நடிகை அமிர்தா ஐயர் இணைந்து நடிக்கும் லிப்ட் படத்தின் மிரட்டும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சரவணன் – மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரை நாயகனாக அறிமுகமானவர் கவின். இந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிக்பாஸில் இவருக்கு கிடைத்த ஆதரவால் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரசிகர்களின் ஆதரவால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கவின் – ரம்யா நம்பீசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லிப்ட்’. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் நடித்து வருகிறார். இந்த படத்தை வினித் வரபிரசாத் இயக்கி வருகிறார். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி தயாரித்து வருகிறார். மைக்கேல் பிரிட்டோ இசையில் இப்படம் உருவாகிறது.

இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படம் என்பதால் மிரட்டும் தெனியில் மோஷன் போஸ்டர் உள்ளது. இந்த படம் விரைவில் இப்படத்தை விரைவில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகிறது.

Latest Posts

புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!

நடிகர் யோகிபாபு ஒரு புதிய படத்தில் புதையல் வேட்டைக்காரராக நடிக்கவுள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் ராஜ்....

வெற்றிமாறன்-சூரி படத்தின் புதிய அப்டேட்..

வெற்றிமாறன் - நடிகர் சூரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன்...

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வரும் உதயநிதி…படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…

உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்தியில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம்...

அமெரிக்காவில் ஹவுஸ்புல்லான திரையரங்கம்.. ‘கர்ணன்’ படத்தை குடும்பத்துடன்‌ பார்த்த தனுஷ் மகிழ்ச்சி!…

கர்ணன் படத்தை நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் அமெரிக்கா திரையரங்கு ஒன்றில் பார்த்துள்ளார். தனுஷின் நடிப்பில் வெளியான ...

Actress

TTN Cinema