துடிப்பு மிக்க இளம் பெண்ணாக கீர்த்தி சுரேஷ்… நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது ‘மிஸ் இந்தியா’!

துடிப்பு மிக்க இளம் பெண்ணாக கீர்த்தி சுரேஷ்… நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது ‘மிஸ் இந்தியா’!

கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிஸ் இந்தியா என படத்தின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் ஒய்.நரேந்திரநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் 2020 நவம்பர் 4 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் பிரத்தியேகமாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் ஜகபதி பாபு, நதியா மொயுடு, ராஜேந்திர பிரசாத், நவீன் சந்திரா, வி.கே.நரேஷ், புஜிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

துடிப்பு மிக்க இளம் பெண்ணாக கீர்த்தி சுரேஷ்… நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது ‘மிஸ் இந்தியா’!


சம்யுக்தா மனாசா என்ற இளம் உணர்ச்சிமிக்க பெண்ணின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சம்யுக்தா தனது தாத்தாவின் கனவையும் தனது சின்ன வயது லட்சியத்தையும் நிறைவேற்றும் முயற்சியில், கடினமாக ஈடுபடுகிறார்.


பின்னர் கதை அமெரிக்காவிற்கு நகர்கிறது, இந்தியா தேநீரை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறார். மற்ற தொழிலதிபர்கள் இவரரை வளர விடாமல் தடுக்கின்றனர். அவர்களை எதிர்த்துப் போராடி எப்படி வெற்றி காண்கிறார் என்பதே படத்தின் கதை.

துடிப்பு மிக்க இளம் பெண்ணாக கீர்த்தி சுரேஷ்… நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது ‘மிஸ் இந்தியா’!

மிஸ் இந்தியா படத்தில், கீர்த்தி சுரேஷ் இதற்கு முன் பாத்திராத சக்தி வாய்ந்த தொழிலபதிராக வலம் வருகிறார். நேரடியாக தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்திலும் டப்பிங் செய்யப்படுகிறது.

“மிஸ் இந்தியா என்பது சாமியுக்தாவின் அழகாக வடிவமைக்கப்பட்ட கதை, அவர் தனது கனவுகளை அடைவதைத் தடுக்க எதையும் தகர்த்தெறிந்துவிட்டு முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களுக்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஏனெனில் இது பல இளம் பெண்களை ஊக்குவிக்கும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story