பிரம்மாண்டமாக வெளியாகும் “கே.ஜி.எப் 2” ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரம்மாண்டமாக வெளியாகும் “கே.ஜி.எப் 2” ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

யாஷ் நடித்து பிரம்மாண்டமாக தயாராகியுள்ள கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக வெளியாகும் “கே.ஜி.எப் 2” ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

கன்னட திரையுலகில் இப்படியொரு படமா என திரையுலகமே வியந்து பார்த்த படம் கே.ஜி.எப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இப்படத்தில் நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்ட கன்னட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.

பிரம்மாண்டமாக வெளியாகும் “கே.ஜி.எப் 2” ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

முதல் பாகம் வெற்றியடைந்ததையடுத்து கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கப்போவதாக இயக்குனர் பிரசாந்த் நீல் அறிவித்தார். முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கப்போவதாகவும் கூறினார் நீல். முதல் பாகத்தில் ஹீரோகவாக நடித்த யாஷ் இந்த படத்திலும் நடிக்கிறார். இப்படத்தின் இரண்டாம் வில்லனாக கருதப்படும் சூரியவர்மாவின் தம்பியான ஆதிரா கதாபாத்திரத்திற்கு சஞ்சய் தத் நடித்துள்ளார். இது தவிர ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக வெளியாகும் “கே.ஜி.எப் 2” ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய மிரட்டியது. இதையடுத்து படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்ட ஷூட்டிங் விரைவாக நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதிரடியில் மிரட்டப்போகும் கே.ஜி.எப் 2 படம், வரும் ஜூலை 16ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிடப்படுகிறது. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் இந்த படம் உலக முழுவதும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Share this story