இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி! சின்ன தம்பி 30 ஆண்டுகள் நிறைவு… குஷ்பு நெகிழ்ச்சிப் பதிவு!

இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி! சின்ன தம்பி 30 ஆண்டுகள் நிறைவு… குஷ்பு நெகிழ்ச்சிப் பதிவு!

‘சின்ன தம்பி’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நடிகை குஷ்பு அந்தப் படத்தின் அற்புதமான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

பி வாசு இயக்கத்தில் பிரபு மற்றும் குஷ்பு நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியானது ‘சின்ன தம்பி’ திரைப்படம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பல தியேட்டர்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி சாதனை பெற்றது.

இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி! சின்ன தம்பி 30 ஆண்டுகள் நிறைவு… குஷ்பு நெகிழ்ச்சிப் பதிவு!

மகாராணியாய் வளர்க்கப்படும் பணக்காரப் பெண் குஷ்புவிற்கும், அதே வீட்டில் வேலைக்காரனாக இருக்கும் பிரபுவுக்கும் ஏற்படும் காதல் கதை தான் சின்ன தம்பி. இந்தப் படம் குஷ்புவின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது சின்ன தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து குஷ்பு அந்தப் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

“இவ்வளவு நாட்கள் ஓடிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. இந்த அற்புதமான படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிறது. காலம் மிக வேகமாக பறக்கிறது. இந்தப் படத்தில் என்னை நந்தினியாக நடிக்க வைத்து எனக்குள் நானே பார்க்காத எனது பக்கத்தை வெளிக்கொண்டு வந்ததற்காக என் இயக்குனர் பி வாசு சாருக்கு நான் எப்போதும் கடன்பட்டிருப்பேன். மறைந்த தயாரிப்பாளர் கே பாலு சாருக்கும் தான். எந்த ஒரு கர்வமும் இல்லாமல், படத்தின் கிளைமேஷில் எனக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு எந்தவொரு ஆட்செபனையும், தெரிவிக்காத என் சக நடிகர் பிரபு சாருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எந்தவொரு நடிகரும் இப்படி செய்ததில்லை. இசைஞானி இளையராஜாவுக்கு மிகவும் அற்புதமான பாடல்களைத் தந்ததற்காக நன்றி. இறுதியாக என்னை ஏற்றுக்கொண்டதற்காக மக்களுக்கு பெரிய நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Share this story