நடிகையாகும் ஸ்ரீதேவியின் 2வது மகள்… விரைவில் அறிவிப்பு

நடிகையாகும் ஸ்ரீதேவியின் 2வது மகள்… விரைவில் அறிவிப்பு

ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி, விரைவில் நடிக்கவிருப்பதாக அவரது தந்தை போனி கபூர் அறிவித்துள்ளார்.

நடிகையாகும் ஸ்ரீதேவியின் 2வது மகள்… விரைவில் அறிவிப்பு

கடந்த 2018ம் ஆண்டு துபாயில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்தார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜான்வி, இளைய மகள் குஷி,

நடிகையாகும் ஸ்ரீதேவியின் 2வது மகள்… விரைவில் அறிவிப்பு

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ஏற்கனவே நடித்து வருகிறார். தடக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், ரூஹி அஃப்ஸானா, தோஸ்தானா படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றனர். தொடர்ந்து தமிழ் படமான நயன்தாராவின் கோலமாவு கோகிலா ரீமேக் படத்தில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் நடித்து வருகிறார்.

நடிகையாகும் ஸ்ரீதேவியின் 2வது மகள்… விரைவில் அறிவிப்பு

இந்நிலையில் ஜான்வி கபூரை தொடர்ந்து ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளான குஷி நடிக்கவிருப்பதாக அவரது தந்தை போனி கபூர் தெரிவித்துள்ளார். குஷியும் நடிப்பில் ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share this story