பட்ஜெட்டால் பதறிய நிறுவனம்… புதிய இயக்குனருக்கு வாய்ப்பு…

பட்ஜெட்டால் பதறிய நிறுவனம்… புதிய இயக்குனருக்கு வாய்ப்பு…

முன்னணி இயக்குனரின் பட்ஜெட்டை பார்த்து பதறிய பட நிறுவனம், அந்த வாய்ப்பை புது இயக்குனருக்கு கொடுத்துள்ளது.

பிரபல திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று குழந்தைகளை கவர்ந்த முன்னணி நடிகரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்ததாம். அதற்காக நம்பர் நடிகையின் காதலனிடம் முன்னணி ஹீரோவை வைத்து படம் பண்ண கேட்டார்களாம்.

ஓகே சொன்ன இயக்குனர், உடனடியாக கதை மற்றும் பட்ஜெட் ஆகியவற்றை ரெடி செய்து அந்த நிறுவனத்திடம் சென்று கொடுத்தாராம். பட்ஜெட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் யோசித்து சொல்றோம் என்று அந்த இயக்குனரை அனுப்பிவிட்டார்களாம்.

என்ன செய்வது என்று யோசிச்ச நிறுவனம், அந்த முன்னணி நடிகரின் படத்தை புது இயக்குனரைக் கொண்டு தயாரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். இந்த புது கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகும் என பச்சி ஒன்னு நமக்கு தகவல் சொல்லியது.

Share this story