பிரசாந்தின் 'அந்தகன்' படத்திற்கு உதவும் நடிகர் விஜய்.. சர்ப்ரைஸ் அறிவிப்பு..!

vijay


பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக தளபதி விஜய் உதவி செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘அந்தகன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி சில ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தான் பிரசாந்த் நெருங்கிய உறவினர் விக்ரம் நடிக்கும் ’தங்கலான்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் பிரசாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த போதே இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதாகவும் அந்த நட்பின் அடிப்படையில் ‘அந்தகன்’ படத்தின்  புரமோஷனிற்கு உதவுவதாக விஜய் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், ’அந்தகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள அந்தகன் கீதம்  என்ற பாடலை நடிகர் விஜய் 24.07.24 அன்று வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story