'2கே லவ் ஸ்டோரி' படத்தின் 3-வது பாடல் வெளியீடு

'2கே லவ் ஸ்டோரி' படத்தின் 3-வது பாடல் வெளியாகியுள்ளது.
வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் "நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ஈஸ்வரன்" உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள ’2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள '2கே லவ் ஸ்டோரி' படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் `2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.
Let's fall in the magic of #VethaalaKathai from #2KLoveStory, OUT NOW 💞
— D.IMMAN (@immancomposer) January 29, 2025
🔗https://t.co/5RZHLl9dIc
A #DImmanMusical
Praise God!#2KLoveStoryFrom14thFeb ❤️@Dir_Susi @iamjagaveer @MeenakshiGovin2 @CityLightPics @Vignesh17935 @Dhananjayang @CreativeEnt4 @Bala_actor… pic.twitter.com/Oi5GkrZmw1
இந்த நிலையில், தற்போது இப்படத்தின் 3வது பாடல் ’வேதாள கதை’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை மரியா ரோ வின்சென்ட் மற்றும் அனுஜ் மேத்யூ இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார். இது குறித்த பதிவை இசையமைப்பாளர் டி.இமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.