துபாய் கார் ரேஸில் 3வது இடம்.. உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்..!

ak
துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர் கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில் நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், அஜித் குமார் ஓட்டுநராக 414 ஆம் என்ன காரை ஓட்டி இருந்தார். அதற்காக அவருக்கு "ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்" என்ற விருது வழங்கப்பட்டது. அந்த விருது அஜித்துக்கு வழங்கப்பட முக்கிய காரணமும் உள்ளது. அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் பிரேக் செயல் இழந்து விபத்தில் சிக்கியது. அதை தாண்டி அவர் மீண்டும் கார் ஓட்டிச் சென்றார். அதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதை அஜித் குமாரின் ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர்.


 

Share this story