அமீர் படத்தை கைப்பற்றிய ‘மாநாடு’ தயாரிப்பாளர்.. படத்தின் தலைப்பு அறிவிப்பு

UyirThamizhukku

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களை கொடுத்து திறமைமிகு இயக்குனராக இருப்பவர் அமீர். பாலாவிடன் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், மெளனம் பேசியதே, ராம், பருத்தி வீரன், ஆதி பகவன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது யோகி, யுத்தம் செய், வட சென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்பதை என்பதை நிரூபித்துள்ளார். 

UyirThamizhukku

இதையடுத்து ஆதம்பாவா இயக்கத்தில் அமீர் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமீருடன் இணைந்து சாந்தினி, இமான் அண்ணாச்சி, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வித்யாசாகர் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

UyirThamizhukku

இந்த படத்திற்கு உயிர் தமிழுக்கு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

Share this story