விரைவில் அம்மாவாக போகிறேன் - மகிழ்ச்சி செய்தி சொன்ன நடிகை பூர்ணா !

poorna

தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை பூர்ணா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. சினிமாவிற்காக இந்த பெயரை வைத்துக் கொண்டாலும், இவரின் உண்மையான பெயர் சாம்னா கசிம். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

poorna

அதன்பிறகு கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான், தலைவி, லாக்கப் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் எப்போதும் கம்பீரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பூர்ணாவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துபாய் தொழிலதிபர் சானித் ஆசிப் அலி என்பவரை பூர்ணா திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை பூர்ணா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த செய்தி பார்த்த ரசிகர்கள், பூர்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story