தொடர்ந்து திரைப்படங்கள் வெற்றி... அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் !

anupama parameswaran

தனது திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுள்ளதால் தனது சம்பளத்தை அதிரடியாக அனுபமா பரமேஸ்வரன் உயர்த்தியுள்ளார். 

‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன், முதல் படமே சூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 

anupama parameswaran

தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கொடி’ படத்திலும், அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிகிறது. தெலுங்கில் ‘பட்டர்ஃப்ளை’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா 2’, ‘18 பேஜஸ்’ ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளன. அதனால் வெறும் 50 லட்சம் சம்பளம் பெற்று வந்த அவர், தற்போது தனது சம்பளத்தை 1.20 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Share this story