பேஸ்புக் கணக்கு முடக்கம்.. ‘லவ் டுடே’ இயக்குனர் வேதனை !

pradeep ranganathan

தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ‘லவ் டுடே’ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வேதனை தெரிவித்துள்ளார். 

‘கோமாளி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்தார் பிரதீப் ரங்கநாதன்.  கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 4-ஆம் தேதி வெளியானது.  2k கிட்ஸ்களின் காதல் வாழ்க்கையை பிரதிப்பலித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

pradeep ranganathan

இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்த படம் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் உலக அளவில் 54 கோடியும், தமிழகத்தில் 44 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் எனது பெயரில் போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கை முடக்கப்பட்டுள்ளது. இதுபோன்று செய்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார் என்பதை காட்டியற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். 

 

Share this story