மெகா ஹிட்டடித்துள்ள கார்த்தியின் ‘சர்தார்’... இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் !

sardar

கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் மெகா ஹிட்டடித்துள்ள நிலையில் இயக்குனருக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி பல கெட்டப்புகளில் நடித்து அசத்திய திரைப்படம் ‘சர்தார்‘. கடந்த தீபாவளியன்று வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் 60 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. 

sardar

இதனால் ‘சர்தார்’ படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ‘இரும்புத்திரை’ என்ற படத்தை ஹிட் கொடுத்துள்ள பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது அவரின் வெற்றி வரிசையில் அடுத்த மைல் கல் என்றே சொல்லவேண்டும். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், சங்கி பாண்டே, நடிகை லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரித்துள்ளார். இந்நிலையில் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியையடுத்து படத்தின் இயக்குனர் பிஎஸ் இயக்குனர் மித்ரனுக்கு தயாரிப்பாளர் எஸ்.இலட்சுமண்குமார் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். டோயோட்டா பார்ச்சுனர் எஸ்யூவி என்ற அந்த சொகுசு காரை மித்ரனுக்கு நடிகர் கார்த்தி வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

 

Share this story