‘நினைப்பதை எடுக்கும் சூழல் சினிமாவில் இல்லை’ - தங்கர்பச்சான் வேதனை !

KarumegangalKalaiginrana
‘கருமேகங்கள் கலைக்கின்றன’ படத்தின் கதாபாத்திரம் குறித்து சுவாரஸ்சியமான விஷயங்களை இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். 

வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான தங்கர் பச்சான் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் ‘கலைமேகங்கள் கலைக்கின்றன’. இந்த படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகிபாபு  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

KarumegangalKalaiginrana

இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்னும் 4 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று விடும். எப்போதோ முடிந்திருக்க வேண்டுடிய இப்படம் சிறு தடங்களால் தாமதமாகிவிட்டது. இதுவரை மொத்தம் 53 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். அதில் 10 படங்களை இயக்கியும், மீதமுள்ள திரைப்படங்களில் ஒளிப்பதிவும் செய்துள்ளேன். 

சினிமாவில் நினைப்பதை எடுக்கும் சூழல் இல்லை. அப்படி இந்த படத்தில் இருக்கக்கூடாது என்பதால் பிடிவாதமாக படத்தை எடுத்துள்ளேன். படம் பார்ப்பவர்களுக்கு இந்த படம் ஒரு இயல்பான இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதை இந்த படம் பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன். இந்த படத்தின் கதை கடந்த 2006-ஆம் எழுதப்பட்டது. ஒவ்வொரு முறை முயற்சித்தபோதும் படமாக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அது சாத்தியமாகி இருக்கிறது. 

KarumegangalKalaiginrana

ராமநாதன் என்ற கதபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். அவரை தவிர இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது. அவர் நடிக்கவில்லை என்றால் படத்தை இயக்கவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். கதையை கூறியவுடன் பாரதிராஜா ஒப்புக்கொண்டார். 

பொதுவாக யோகிபாபு என்றால் காமெடி நடிகர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை உடைக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் இந்த படத்தில் இருக்கும். பிசியான ஷெட்டியூலிலும் எனக்காக கால்ஷீட் கொடுத்தார். அதேபோன்று கோமகன் என்ற கதபாத்திரத்லி இயக்குனர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இதுவரை பார்க்காத கௌதம் மேனனை இந்த படத்தில் பார்க்கலாம். எப்போது ஒரு தரமான படைப்பு தனக்கு தேவையானத்தை தானே தேடிக் கொள்ளும். அதேபோல தான் இந்த படம் இருக்கிறது. இந்த படம் நிச்சயம் சாதனை படைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தங்கர் பச்சான் தெரிவித்தார். 

 

 

Share this story