முடித்திருத்தும் தொழிலாளியாக மாறிய ஆர்ஜே பாலாஜி... புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

rj balaji

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

 தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்டவர் ஆர்ஜே பாலாஜி. ஆர்ஜேவாக இருந்த அவர், தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெற்றி வரிசையில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூர்’.

rj balaji

இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சலூன் தொழிலாளியாக ஆர்ஜே பாலாஜி நடிக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story