ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்

ttn

நடிகரும்,  இயக்குனமான  ராகவா லாரன்ஸ் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  தனது நடன திறமையால் முன்னேறி தற்போது நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவராக ராகவா லாரன்ஸ் வலம் வருகிறார். நடன ஆசிரியராக நடிகர் ரஜினிகாந்த் முதல் விஜய் வரையிலும் , தெலுங்கில் சிரஞ்சீவி முதல் நாகார்ஜுனா வரையிலும் பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது சொந்த அறக்கட்டளை மூலம் உதவி செய்தும் வருகிறார்.

gautham meon and raghava lawrence

திரைப்படங்களில் ஹீரோவாக மட்டுமில்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் பலருக்கு உதவி செய்வதன் மூலம் தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.  ஆரம்பத்தில் பைட் மாஸ்டர் சுப்பராயனின் உதவியாளராக தனது திரை  வாழ்வை தொடங்கிய  இவர் ரஜினிகாந்தின் உதவியுடன் ஒரு நடன குழுவில் சேர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கும் ராகவா லாரன்சுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளான இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.  இதற்கான புகைப்படத்தை தனது  இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் நான் ஏதாவது சேவை செய்ய முடிவு செய்கிறேன். இந்த ஆண்டு நான் பசியின் மதிப்பை அறிந்து #அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இடங்களுக்கு நேரில் சென்று உணவு விநியோகம் செய்வேன். எனக்கு உங்கள் ஆசிகள் வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
 

Share this story