பொங்கல் விழா கொண்டாடிய ‘மாவீரன்’ படக்குழுவினர்.. சிவகார்த்திகேயன், அதிதியின் வைரல் வீடியோ !

maaveeran

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழுவினர் பொங்கல் விழா கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

‘பிரின்ஸ்’ படத்திற்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். 

maaveeran

இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு இடையே பொங்கல் விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். இதில் சிவகார்த்திகேயன், சரிதா, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


 

Share this story