‘தீர்க்கத்தரிசி’... அஜ்மல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

Theerkadarishi
 அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கத்தரிசி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் அஜ்மல் அமீர். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர்,  ‘திரு திரு துறு துறு’, ‘கோ’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘சித்திரம் பேசுதடி 2’, ‘நெற்றிக்கண்’, கோல்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

Theerkadarishi

தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் அஜ்மல் அமீர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘தீர்க்கத்தரிசி’. இந்த படத்தை பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பாலா இசையில் உருவாகும் இப்படத்திற்கு லஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதிஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story