விஜய்யின் ‘வாரிசு’ படப்பிடிப்பு நிறைவு... வேகமெடுக்கும் தயாரிப்பு பணிகள் !

varisu

 விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கி வருகிறார். தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. 

varisu

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்று வந்தது. இதில் சுரங்கம் பகுதியில் இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது ஹெலிகாப்டரில் விஜய் இருக்கும் மாஸ் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றதை அடுத்து ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளது. 

 

Share this story