ரூட்டை மாற்றிய கமல்… லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு..!?

ரூட்டை மாற்றிய கமல்… லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு..!?

உலக நாயகன் கமல், கட்சி பிரச்சாரங்களுக்கு நடுவே தனது அடுத்த பட வேலையைத் தொடங்கிவிட்டார். லோகேஷ் கனகராஜ் தேனியில் லொகேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று ஏற்கனவே ஒரு செய்தி போட்டிருந்தோம். பொங்கல் முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் என்பதுவரை அப்டேட் கொடுத்திருந்தோம். இந்தப் படம் இப்போதைக்கு நடக்காது என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்!

ரூட்டை மாற்றிய கமல்… லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு..!?

காரணம்.? ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று எல்லோரும் எதிர் பார்த்த மாதிரிதான் கமலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பே மக்களை சந்திப்பது என்ற முடிவில்தான் திடீர் பிரச்சாரம் தொடங்கியது. ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டதால் இன்னும் தீவிரமாக மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதென்று முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால் லோகேஷ் கனகராஜ் படத்தை எலெக்ஷனுக்குப் பிறகு ஆரம்பிச்சுக்கலாம் என்று சொல்லிட்டாராம்.

ரூட்டை மாற்றிய கமல்… லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு..!?

இந்த தகவல் தெரிந்ததும் தெலுங்கு ஸ்டார் பிரபாஸ் போனைப் போட்டு வாங்க பாஸ் நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று சொல்ல… பறந்து போய் அட்வான்ஸ் வாங்கிட்டு வந்திட்டார். ஆனால், இந்தப் படமும் ஏப்ரல் மாதம்தான் தொடங்குமாம். இந்தக் கேப்பில் கார்த்தி அடிச்சதுதான் செம சிக்ஸர்!

ரூட்டை மாற்றிய கமல்… லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு..!?

ஏற்கனவே கைதி படப்பிடிப்பின் போதே ‘கைதி-2’ பண்ணலாம் என்று கார்த்திக்கு வாக்கு கொடுத்திருந்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதை நினைவு படுத்தி’ வாங்க ப்ரோ நாம போகலாம்’ என்று கார்த்தி பாலைத் தூக்கிப் போட்டிருக்கிறார். இயக்குனரும் ஓகே சொல்லிவிட்டார். பொங்கல் முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ரூட்டை மாற்றிய கமல்… லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு..!?

ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன்னு ஒரு வார்த்தைதான் சொன்னார். எவ்வளவு மாற்றம் நடக்குது பாருங்க!

Share this story