தாலிக்கட்டியுடன் புது மனைவிக்கு முத்தம் கொடுத்த ஹரிஷ் கல்யாண்... மணமக்களை வாழ்த்த குவிந்த பிரபலங்கள் !

harish kalyan

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா புதுமண ஜோடியை வாழ்த்த குவிந்த திரைப்பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

harish kalyan

வளர்ந்து வரும் நடிகராக சினிமாவில் இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இளம் பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகராக மாறினார். இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட சில ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து அடுத்தடுத்த புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.‌

harish kalyan

சமீபத்தில் நர்மதா என்ற பெண்ணை பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதன்படி சென்னையில் நர்மதா உதயகுமாரை பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார். இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் தாலி கட்டியவுடன் தனது புது மனைவிக்கு கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். 

harish kalyan

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டனர். இதுதவிர நடிகைகள் பிந்து மாதவி, இந்துஜா ரவிச்சந்திரன், அதுல்யா ரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பிந்து மாதவியும், இந்துஜாவும் ஹரிஷ் கல்யாணுக்கு நெருங்கிய தோழிகள் ஆவர். இதேபோன்று தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் 'டீசல்' படத்தில் அதுல்யா கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

harish kalyan

harish kalyan

harish kalyan

Share this story