தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது… விரைவில் பிரேம்ஜிக்குத் திருமணம்!?

தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது… விரைவில் பிரேம்ஜிக்குத் திருமணம்!?

நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திருமணங்களில் பிரேம்ஜியின் திருமணமும் ஒன்று. திரைத்துறை பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் முடிக்கமால் இருந்து வருகிறார். எனவே ரசிகர்கள் அவருக்கு எப்போது திருமணம் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது… விரைவில் பிரேம்ஜிக்குத் திருமணம்!?

இந்நிலையில் பிரேம்ஜியின் தந்தை இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் பிரேம்ஜி திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

“இன்னும் ஒரு வருடத்திற்குள் பிரேம்ஜிக்குத் திருமணம் செய்து வைக்க உள்ளோம். தற்போது தான் அவர் அம்மா இழப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த சோகத்திலிருந்து மீண்ட பிறகு அவருக்குத் திருமணம் செய்துவைக்க உள்ளோம்” என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது… விரைவில் பிரேம்ஜிக்குத் திருமணம்!?

முக்கியமான விஷயம் என்னவென்றால் இதுவரை திருமணமே வேண்டாம் என்று கூறி வந்த பிரேம்ஜி தற்போது திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளாராம். விரைவில் கெட்டிமேளம் கொட்டவிருக்கும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள்!

Share this story